மாலத்தீவும் பிக்பாஸ் ஷிவானியும்... வைரலாகும் நீச்சல்குள புகைப்படம்!

  • IndiaGlitz, [Saturday,March 20 2021]

இன்ஸ்டாகிராமில் மில்லியன்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளவர்களுக்கு மாலத்தீவு சென்றுவர இலவச விமான கட்டணம் மற்றும் தங்கும் வசதி, உணவு வசதி ஆகியவற்றை அந்நாட்டின் சுற்றுலாத் துறை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மாலத்தீவுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது

மாலத்தீவு சென்ற நடிகைகள் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் பலரும் மாலத்தீவுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்படுவதால் அந்நாட்டிற்கு சுற்றுலாத்துறை மூலம் வரும் வருமானம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது

ஏற்கனவே தமிழ் திரையுலகை சேர்ந்த பல நடிகைகள் மாலத்தீவு சென்று வந்த நிலையில் அந்த வரிசையில் தற்போது பிக்பாஸ் புகழ் ஷிவானியும் மாலத்தீவு சென்றுள்ளார். மாலத்தீவு சென்றுள்ள ஷிவானி, அங்கு உள்ள நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார் என்பதும் அந்தப் புகைப்படத்திற்கு வழக்கம்போல் ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

ஷிவானி இன்னும் சில நாட்கள் மாலத்தீவில் இருப்பார் என்பதால் ஒவ்வொரு நாளும் அவருடைய மாலத்தீவு குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.