வைட்டமின் 'D' பெறுவதற்காக பிக்பாஸ் ஷிவானி செய்த வேலையை பாருங்கள்: வைரல் புகைப்படம்!
- IndiaGlitz, [Sunday,March 07 2021]
தினமும் சில நிமிடங்கள் வெயிலில் நின்றால் வைட்டமின் ’D' கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுவது உண்டு. அதனை பின்பற்றி பிக்பாஸ் ஷிவானி வெயிலில் நிற்கும் புகைப்படத்தை பதிவு செய்து ’தினமும் ஒரு டோஸ் வைட்டமின் ’D' பெறுகிறேன்’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களின் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்று சற்று முன் அவர் பதிவு செய்த ஒரு புகைப்படத்தில் வெயிலில் நின்று கொண்டு தலையில் கை வைத்து இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் ’இன்றைய வைட்டமின்-டி டோஸ்’ அவர் கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டு ஒரு மணி நேரமே ஆகியுள்ள நிலையில் அதற்குள் ஒரு லட்சத்தி பத்தாயிரம் பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த புகைப்படத்திற்கு வழக்கம்போல் ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர்.