பிக்பாஸ் ஷிவானியின் ரவுடிக்கட்டு லுங்கி டான்ஸ்: ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் லுங்கி டான்ஸ் ஆடியிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் கிட்டத்தட்ட 80 நாட்கள் அமைதியாக இருந்தார் என்றும், அவர் பாலாஜியுடன் மட்டுமே நெருக்கமாக இருந்தார் என்றும் குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையில் கடைசியாக டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் மட்டும் அவர் சிறப்பாக விளையாடி அந்த வாரமே அவர் சிங்கப்பெண் என்ற பட்டத்துடன் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஷிவானி தனது சமூக வலைதளங்களில் ஒரு சில பதிவுகளை புகைப்படங்களாக வெளியிட்டு வரும் நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இந்த நிலையில் வரும் ஞாயிறன்று பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இது குறித்த புரமோ வீடியோக்கள் அவ்வப்போது விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி வரும் நிலையில் அதில் ஷிவானி ரவுடிக்கட்டு லுங்கி அணிந்து அட்டகாசமான டான்ஸ் ஆடி இருக்கும் காட்சிகள் உள்ளன. ஷிவானியின் இந்த டான்ஸை பார்த்தபின் அவரது லட்சக்கணக்கான ஃபாலோயர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரம்யா பாண்டியன், சம்யுக்தா உள்பட ஒருசில பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு திரையுலகில் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் விரைவில் ஷிவானிக்கும் திரையுலகில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
???? பிக்பாஸ் கொண்டாட்டம் - வரும் ஞாயிறு மதியம் 1:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossKondattam #VijayTelevision pic.twitter.com/IkWR8ppXq3
— Vijay Television (@vijaytelevision) February 3, 2021
????
— Vijay Television (@vijaytelevision) February 2, 2021
பிக்பாஸ் கொண்டாட்டம் - வரும் ஞாயிறு மதியம் 1:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossKondattam #VijayTelevision pic.twitter.com/3ep8OF3VpT
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com