தடுப்பூசி போட்டும் கொரோனா பாதிப்பு: பிக்பாஸ் தமிழ் நடிகையின் வீடியோ!

  • IndiaGlitz, [Monday,August 16 2021]

தான் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் இருப்பினும் தனக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் ரிசல்ட் வந்திருப்பதாகவும் பிக் பாஸ் தமிழ் நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஏராளமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் பலர் உயிர் இழந்துள்ளனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக திரையுலகைச் சேர்ந்த பலர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக கட்டுக்குள் வந்துள்ள நிலையில் திரையுலகினர் யாரும் சமீபகாலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்திகள் கடந்த சில வாரங்களாக வரவில்லை. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகருமான ஷெரின் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் இதனை அடுத்து தன்னுடன் கடந்த மூன்று நான்கு நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து சோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்தி கொள்ளுமாறும் குறிப்பிட்டு வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டதால் லேசான பாதிப்பு மட்டுமே இருப்பதாகவும் விரைவில் குணமாகி விடுவேன் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் ஷெரின் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.