பிக்பாஸ் ஷெரின் வீட்டில் நிகழ்ந்த துக்கம்.. ஒரு வாரம் கழித்து தான் அவருக்கே தெரிந்ததாம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் ஷெரின் வீட்டில் ஒரு பெரிய துக்கம் நிகழ்ந்துள்ள நிலையில் அவருக்கே ஒரு வாரம் கழித்து தான் தெரிந்தது என்று வருத்தத்துடன் பதிவு செய்திருப்பதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரை உலகில் ’விசில்’ என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஷெரின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதும் அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக அந்த நிகழ்ச்சியில் பங்காற்றினார் என்பதும் தெரிந்தது.
மேலும் சமூக வலைதளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக ஷெரின் இருந்து வருகிறார் என்பதும் அவருக்கு ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக்பாஸ் ஷெரின் தனது தந்தை காலமாகிவிட்டதாகவும், அவர் காலமாகி ஒரு வாரம் கழித்து தான் தனக்கு தெரியும் என்று கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:
உங்களை நான் அதிகம் நேசித்தேன் அப்பா, உங்கள் அன்பிற்காக வாழ்நாள் முழுவதும் ஏங்கினேன், நீங்கள் மறைந்து ஒரு வாரம் ஆகிவிட்டது, ஆனால் எனக்கு இன்று தான் தகவல் கிடைத்தது, இந்த தகவலை கேட்டு என் இதயம் சுக்கு நூறாக உடைந்து விட்டது, உங்களுடைய இந்த ஒரே ஒரு படம் மட்டுமே என்னிடம் இருக்கிறது, இதை என் வாழ்நாள் முழுவதும் வைத்து பாதுகாப்பேன், உங்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன், உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்’ என பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து நடிகை கஸ்தூரி உள்பட பல திரையுலக பிரபலங்களும், ஏராளமான ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments