பிக்பாஸ் தமிழ் பிரபலம் நடிக்கும் 'என் எதிர ரெண்டு பாப்பா': நாயகியும் பிக்பாஸ் பிரபலம் தான்..!

  • IndiaGlitz, [Saturday,August 19 2023]

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலம் நாயகனாக நடிக்க இருக்கும் நிலையில் அதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை நாயகியாக நடிக்கும் வெப் சீரிஸ் தான் ’என் எதிர ரெண்டு பாப்பா’. இந்த வெப் தொடர் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷாரிக். இவர் ரியாஸ்கான் மற்றும் உமா ரியாஸ்கான் தம்பதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே ’பென்சில்’, ’டான்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது ’என் எதிரே ரெண்டு பாப்பா’ என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இந்த தொடரின் நாயகிகளில் ஒருவராக பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட சாக்சி அகர்வால் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே தமிழில் சுமார் ஐந்து படங்களுக்கு மேல் நடித்து வரும் நிலையில் இந்த வெப்தொடரிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெப் தொடரில் இன்னொரு நாயகியாக மனிஷா ஜாஸ்னனி நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க கிளுகிளுப்பாகவும் காமெடியாக இருக்கும் பேய் கதையம்சம் கொண்ட இந்த தொடர் விரைவில் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெப் தொடரின் ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.