பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு? யாருக்கு அதிக சம்பளம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் தற்போது இந்நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் முதல் நாமினேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில் முதலாவதாக வெளியேறும் போட்டியாளர் யார் என்பதை அறிய சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களின் சம்பளம் குறித்து தகவல் கசிந்துள்ளது. இந்த சீசனில் பிரபலமான திரையுலக நட்சத்திரங்கள் யாரும் இல்லை என்பதால் போட்டியாளர்களின் சம்பளம் மிகவும் குறைவாக இருப்பதாக தெரிகிறது. பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்களின் சம்பளம் குறித்து தகவல் தற்போது பார்ப்போம்.
1. ஜிபி முத்து: நெல்லையை சேர்ந்த இவர் டிக்டாக், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைத்தளஙக்ளில் பிரபலமானவர். இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.15,000 முதல் 18000 வரை என கூறப்படுகிறது.
2. நடிகர் அசீம்: சீரியல் நடிகரான இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.22,000 முதல் 25000 வரை என கூறப்படுகிறது.
3. அசல் கொலார்: யூடியூபில் ஹிட்டான ஜோர்தால என்கிற பாடல் உள்பட பல பாடல்களை பாடியுள்ள இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.15,000 முதல் 17000 வரை என கூறப்படுகிறது.
4. ஷிவின் கணேசன்: திருநங்கையான இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.20,000 முதல் 25000 வரை என கூறப்படுகிறது.
5. ராபர்ட்: பிரபல நடன இயக்குனர். இவர் விஜய், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றியுள்ளார். இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.25,000 முதல் 27,000 வரை என கூறப்படுகிறது.
6. மைனா நந்தினி: இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.20,000 முதல் 25,000 வரை என கூறப்படுகிறது.
7. ராம் ராமசாமி: கிரிக்கெட் வீரர், சினிமா நடிகர். சென்னையை சேர்ந்தவர். இவருக்கு ஒரு நாள் சம்பளம் 15,000 முதல் ரூ.22,000 வரை என கூறப்படுகிறது.
8. ஏடிகே: ராப் பாடகரான இவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கடல் படத்தில் இடம்பெற்ற பாடல், ’அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் உள்பட பல பாடல்களை பாடியுள்ளார். இவர் ஒரு நாள் சம்பளம் 16 ஆயிரம் முதல் 19 ஆயிரம் வரைஎன கூறப்படுகிறது.
9. அமுதவாணன்: விஜய் டிவியின் நடன நிகழ்ச்சிகளிலும், காமெடி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டவர். சமீபத்தில் 'கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்’ நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆனார். இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.23,000 முதல் 27,000 வரை என கூறப்படுகிறது.
10. விஜே கதிர்: சன் மியூசிக் சேனலில் விஜேவாக இருந்தவர். சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ள இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.18,000 முதல் 20000 வரை என கூறப்படுகிறது.
11. ஆயிஷா: மாடல் அழகி, பல விளம்பரங்களில் நடித்துள்ளார். சத்யா சீரியல் மூலம் பிரபலமானவர். இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.28,000 முதல் 30,000 வரை என கூறப்படுகிறது.
12. தனலட்சுமி: மக்கள் சார்பில் தேர்வு செய்யப்பட்ட இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.11,000 முதல் 20,000 வரை என கூறப்படுகிறது.
13. ரக்சிதா: பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் பிரபலமானர்வர். சரவணன் மீனாட்சி சீரியலிலும் இவர் நடித்துள்ளார். இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.25,000 முதல் 28,000 வரை என கூறப்படுகிறது.
14. ஜனனி: இலங்கையை சேர்ந்தவர், தொகுப்பாளினி. இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.21,000 முதல் 26,000 வரை என கூறப்படுகிறது.
15. விஜே மகேஸ்வரி: தொகுப்பாளினி மற்றும் நடிகை. ரைட்டர் படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாகவும், ‘விக்ரம்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.18,000 முதல் 23,000 வரை என கூறப்படுகிறது.
16. நிவா: மாடல், காஸ்ட்யூம் டிசைனரான இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.12,000 முதல் 18000 வரை என கூறப்படுகிறது.
17. குயின்ஸி: சீரியல் நடிகையான இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.15,000 முதல் 20,000 வரை என கூறப்படுகிறது.
18. விக்ரமன்: அரசியல்வாதியான இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.15,000 முதல் 17,000 வரை என கூறப்படுகிறது.
19. சாந்தி: சீரியல் நடிகை, நடனக்கலைஞரான இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.21,000 முதல் 26,000 வரை என கூறப்படுகிறது.
20. மணிகண்டன்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரும், சீரியல் நடிகருமான இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.18,000 முதல் 24,000 வரை என கூறப்படுகிறது.
21. ஷெரினா: பிரபல மாடலான இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.23,000 முதல் 25,000 வரை என கூறப்படுகிறது.
மேற்கண்ட போட்டியாளர்களில் ஆயிஷா மற்றும் அமுதவாணன் அதிகபட்சமாக சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com