இந்த முறை ஒன்றல்ல.. இரண்டு.. டபுள் தோற்றத்தில் கமல்ஹாசனின் புதிய பிக்பாஸ் புரமோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் மிக விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசனின் புரோமோ வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.
விஜய் டிவி ஜாக்குலின், இரவின் நிழல் நடிகை ரேகா நாயர், பத்திரிகையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன், கடந்த சீசனில் கலந்து கொண்ட ரக்ஷிதாவின் கணவர் தினேஷ், நடிகர் பிருத்விராஜ், கோவை டிரைவர் ஷர்மிளா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், தொகுப்பாளர் மாகபா, இந்திரஜா ரோபோ சங்கர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வீடியோ நேற்று வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரே ஒரு வீடு மட்டுமே இருந்த நிலையில் இந்த முறை இரண்டு வீடுகள் என்று கமல்ஹாசன் இரட்டை தோற்றத்தில் புரோமோவில் வந்து அறிவித்துள்ளார்.
’சும்மாவே வீடு ரெண்டாகும்.. இப்ப வீடே ரெண்டாயிடுச்சு.. இன்னும் என்னென்ன ஆகுமோ’ என்ற கேள்வியையும் அவர் எழுப்பி உள்ளார். அட்டகாசமான இந்த புரமோ வீடியோ வைரல் ஆகி வருகிறது.
ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வித்தியாசமாக கொடுத்துக் கொண்டிருக்கும் விஜய் டிவி இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமாக கொடுக்க முயற்சித்துள்ளதால், இந்த நிகழ்ச்சியின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
#BBTamilSeason7 #பிக்பாஸ்@vijaytelevision @disneyplusHSTam pic.twitter.com/RnVuKBIUe3
— Kamal Haasan (@ikamalhaasan) August 25, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com