பிக்பாஸ் தமிழ் சீசன் 7: முதல் வாரமே வெளியேறும் போட்டியாளர் இவர்தான்..!

  • IndiaGlitz, [Saturday,October 07 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரமே ஏழு போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டிருந்தனர் என்பதும் அவர்களின் மூன்று போட்டியாளர்கள் மிகவும் குறைவான வாக்குகள் பெற்றிருந்ததால் அவர்களின் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருந்ததாகவும் நேற்று பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரமே ரவீனா, ஐஷு, பிரதீப் அந்தோணி, ஜோவிகா, பவா செல்லத்துரை, யுகேந்திரா மற்றும் அனன்யா ஆகிய ஏழு போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டிருந்தனர்.

இதில் ரவீனா சுமார் 26 சதவீத வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் தனது இருப்பை தக்கவைத்துக் கொண்டார். பவா செல்லத்துரை, யுகேந்திரன் மற்றும் அனன்யா ராவ் ஆகிய மூவரும் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றிருந்த நிலையில் அதிலும் குறிப்பாக அனன்யா இந்த மூவரில் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றிருந்த நிலையில் அவர்தான் எலிமினேஷன் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்தபடியே அவர் இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன முதல் ஏழு நாட்கள் என்பது ஒரு போட்டியாளரை மதிப்பிட முடியாது என்பதால் முதல் வாரம் எலிமினேஷன் இல்லாமல் இருந்திருக்கலாம் என்று ரசிகர்கள் இந்த வார எலிமினேஷன் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பு.. ரிலீஸ் தேதியை மாற்றிய 'லியோ' தயாரிப்பாளர்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான இறுதி கட்ட புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

கதை மீது நம்பிக்கை வைத்து  படம் எடுத்துள்ளனர். . நேற்று வெளியான படத்திற்கு சூர்யா வாழ்த்து..!

நேற்று த்ரிஷா நடித்த 'தி ரோட்', விஜய் ஆண்டனி நடித்த 'ரத்தம்' மற்றும் 'இறுகப்பற்று' உள்பட ஒரு சில படங்கள் வெளியான நிலையில் நேற்று வெளியான படம் ஒன்றுக்கு நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து

சென்சார் கட் இல்லாமல் ரிலீஸ் ஆவது உறுதி.. 'லியோ' விநியோகிஸ்தர் தகவல்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் சமீபத்தில் சென்சார் ஆனது என்பதும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்தனர் என்பதையும் பார்த்தோம்.

இதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும்.. மோடி தலையிட வேண்டும்: நடிகை ராதிகா ஆவேசம்..!

நடிகை ரோஜாவுக்கு தனது முழு ஆதரவு என தெரிவித்துள்ள நடிகை ராதிகா இந்த விஷயத்தில் மோடி தலையிட வேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

ஜோவிகா தந்தை அனுப்பிய வீடியோவை பகிர்ந்த வனிதா..  விசித்ராவுக்கு பதிலடியா?

ஜோவிகா குறித்த வீடியோ ஒன்றை அவரது தந்தை வனிதாவிற்கு அனுப்பி வைக்க, அந்த வீடியோவை வனிதா தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.