பிக்பாஸ் தமிழ் சீசன் 6 தொடங்குவது எப்போது? இந்த முறை வேற லெவலில் போட்டியாளர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ் என்பதும் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

ஐந்து சீசன்கள் இதுவரை முடிவடைந்துள்ள நிலையில் ஐந்து சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார் என்பதும் அனைத்து சீசன்களையும் அவர் சிறப்பாகவும் சுவாரஸ்யமாகவும் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வந்த தகவலின் படி அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று இந்த நிகழ்ச்சி தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் தேர்வு சரியில்லை என பார்வையாளர்கள் அதிருப்தி தெரிவித்ததை அடுத்து இந்த முறை வேற லெவல் போட்டியாளர்களை களமிறக்க விஜய் டிவி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் அதிகம் இருப்பார்கள் என்றும் விஜய் டிவியில் உள்ளவர்கள் குறைவாகவே இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியை சூப்பர் ஹிட்டாக வேண்டும் என விஜய் டிவி திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கேற்றவாறு போட்டியாளர்களும் வேற லெவல் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.