பிக்பாஸ் தமிழ் சீசன் 6, அதிகாரபூர்வ அறிவிப்பு: தொகுத்து வழங்குபவர் இவர் தான்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் என்பதும் இந்த நிகழ்ச்சி கடந்த ஐந்து சீசன்களாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த 5 சீசன்களாக கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் என்பதும் அவரால் தான் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் ஆரம்பிக்க இருப்பதாக தகவல் வெளியானது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வும் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது கமல்ஹாசனா? அல்லது சிம்புவா? என்ற கேள்வியும் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் விஜய் டிவி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பிக்பாஸ் சீசன் 6 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இதில் கமல்ஹாசன் தோன்றி ’வேட்டைக்கு ரெடியா’ என்று கூறியுள்ளதை அடுத்து அவர் தான் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

விரைவில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'நானே வருவேன்' படத்தின் ரிலீஸ் அப்டேட்: கலைப்புலி எஸ் தாணு அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நானே வருவேன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 

ஜெயம் ரவி - கீர்த்தி சுரேஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகை: அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் இன்னொரு பிரபல நடிகை இணைந்துள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபல நடிகையுடன் தேவிஸ்ரீ பிரசாத் ரகசிய திருமணமா?

பிரபல நடிகையுடன் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் இந்த வதந்திக்கு தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

திருமணத்திற்கு முன்பே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் அமீர்-பாவனி!

பிக் பாஸ் போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி ஆகிய இருவரும் விரைவில் வாழ்க்கையில் இணைய உள்ள நிலையில் அதற்கு முன்பே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிளாக் பண்ணவும் முடியலை, ரிப்போர்ட் பண்ணவும் முடியலை சரியான தொல்லையப்பா: நடிகர் கார்த்தி டுவிட்

'ஓய், உம்மை பிளாக் பண்ணவும், முடியவில்லை ரிப்போர்ட் பண்ணவும் முடியவில்லை சரியான தொல்லையப்பா' என நடிகர் கார்த்தி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.