பிக்பாஸ் தமிழ் சீசன் 6: விஜய் டிவி வெளியிட்ட அதிகாரபூர்வ வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் 6வது சீசன் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வரும் நிலையில் விஜய் டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் மட்டுமின்றி சாதாரணமானவர்களும் கலந்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் விஜய் டிவிக்கு விண்ணப்பம் செய்யலாம் என்றும் தகுதி வாய்ந்தவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் வீடியோவில் பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜூ நடித்துள்ளார்.
இதையடுத்து ஏராளமானோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது. விஜய் டிவியின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக மக்களாகிய நீங்கள் பங்கேற்க ஒரு அறிய வாய்ப்பு! ??
— Vijay Television (@vijaytelevision) August 25, 2022
உடனே https://t.co/EebJTRrsGG Login செய்து #BIGGBOSS-இல் கலந்து கொள்வதற்கான காரணத்தை வீடியோவாக பதிவு செய்து Upload செய்யுங்கள்.. ?? #BiggBossTamil #BBTamilSeason6 #BiggBossTamil6 #பிக்பாஸ் pic.twitter.com/63qFGQqMAq
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments