பிக்பாஸ் தமிழ் சீசன் 6: விஜய் டிவி வெளியிட்ட அதிகாரபூர்வ வீடியோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் 6வது சீசன் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வரும் நிலையில் விஜய் டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் மட்டுமின்றி சாதாரணமானவர்களும் கலந்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் விஜய் டிவிக்கு விண்ணப்பம் செய்யலாம் என்றும் தகுதி வாய்ந்தவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் வீடியோவில் பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜூ நடித்துள்ளார்.

இதையடுத்து ஏராளமானோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது. விஜய் டிவியின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

இதுவரை நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் கார்த்தி!

 நடிகர் கார்த்தி ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடித்து வருகிறார் என்பதும் அவரது படங்கள் இதனால் அடுத்தடுத்து வெற்றி பெற்று வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

மயக்க மருந்து கொடுத்து நிர்வாண வீடியோ: கொலை செய்யப்பட்ட பிக்பாஸ் நடிகை குறித்து சகோதரர் புகார்!

 பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகை ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது சகோதரர்

உருமாறி உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்: 'கோப்ரா' டிரைலர்

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள 'கோப்ரா' திரைப்படம் வரும் 31ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும்

'மாஸ்டர்', 'பீஸ்ட்' படத்தை அடுத்து 'வாரிசு' படத்திலும் விஜய்யுடன் இணைந்த பிரபலம்!

விஜய் நடித்த 'மாஸ்டர்', 'பீஸ்ட்' ஆகிய படங்களில் பணிபுரிந்த பிரபலம் ஒருவர் தற்போது விஜய் நடித்துக்கொண்டிருக்கும் 'வாரிசு' படத்திலும் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜிவி பிரகாஷை அறிமுகம் செய்த இளம் இயக்குனர் மறைவு: அதிர்ச்சியில் கோலிவுட் திரையுலகம்!

இசை அமைப்பாளராக இருக்கும் ஜிவி பிரகாஷை நடிகராக திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த இளம் இயக்குனர் திடீரென காலமானதை அடுத்து கோலிவுட் திரையுலகம் அதிர்ச்சி அடைந்து அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது.