கன்பஃக்சன் ரூமுக்கு அழைக்கப்பட்ட இசைவாணி: இன்னிக்கு ஒரு சம்பவம் இருக்கோ?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களுக்கு நகரத்தார்கள் மற்றும் கிராமவாசிகள் என 2 பிரிவாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் இரண்டு பிரிவினர்களும் சுவாரஸியமாக விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய 2-வது புரோமாவில் திடீரென இசைவானியை பிக்பாஸ் கன்பஃக்சன் அறைக்கு அழைக்கிறார். இதனை அடுத்து இசைவாணியிடம் பிக்பாஸ் நெருப்பு ஆற்றலைகுறிக்கும் காயின் யாரிடம் உள்ளது என்று கேட்க அதற்கு ’என்னிடம் உள்ளது’ என இசைவாணி கூறுகிறார். இதனை அடுத்து அந்த காயினுக்கு உரிய சக்தியை இன்னும் முறையாகவும் சுவாரசியமாகவும் பயன்படுத்துங்கள் என்று கூறுகிறார். அதனை ஆமோதித்துவிட்டுஇசைவாணி வெளியே வருகிறார். இதனை அடுத்து இன்றைய கிராமத்தார் மற்றும் நகரத்தார் டாஸ்க்கில் ஒரு சம்பவம் இருக்கிறது போல் இந்த புரோமோவில் இருந்து தெரிய வருகிறது.

இந்த நிலையில் இன்றைய டாஸ்க்கின்போது, ‘இதெல்லாம் ஒரு பொழப்பா திருடி திங்கலாமா என்று தாமரை கூறுவது டாஸ்க்கிற்காகவா அல்லது அவரது காயினை எடுத்தவர்களை மறைமுகமாக திட்டுகிறாரா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.