அரபிக்குத்து' பாடலுக்கு செம ஆட்டம் போட்ட 'பிக்பாஸ் சீசன் 5' போட்டியாளர்!

தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம் ’பீஸ்ட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த படத்தில் இடம்பெற்ற ’அரபிக்குத்து’ என்ற பாடல் ரிலீஸ் ஆன நிலையில் இந்த பாடல் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை செய்து வருகிறது என்பதும் யூட்யூபில் இரண்டு நாட்களாக நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பாடலுக்கு பல திரையுலக மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் நடனமாடிய வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட நமீதா மாரிமுத்து இந்த பாடலுக்கு கவர்ச்சி உடையில் நடனம் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.