அக்சராவை கேப்டனாக விடாமல் தலையை உடைத்த சிபி!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை புதிய கேப்டன் தேர்வு செய்யப்படுவார் என்றும் அதற்கான டாஸ்க் வைக்கப்படும் என்பதும் தெரிந்தது. அந்த வகையில் இந்த வார கேப்டனுக்கான டாஸ்க் வைக்கப்படும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளன

கேப்டன் பதவிக்கு போட்டியிடும் நபர்களின் பொம்மைகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் அதன் அருகில் ஒரு பானை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போட்டியாளர்கள் யாரை கேப்டனாக்க தேர்வு செய்ய விரும்பவில்லையோ அந்த அந்த நபரின் பொம்மையின் பானையை உடைக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவிக்கின்றார்

இதனை அடுத்து முதல் நபராக செல்லும் சிபி, அக்சராவின் தலையில் உள்ள பானையை உடைக்கிறார். தனக்கு தற்போதுதான் கேப்டனாக வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அதனால் தனக்கு கேப்டன் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் அக்சரா வேண்டுகோள் விடுத்தும், அதனை கவனத்தில் கொள்ளாமல் சிபி, அக்சராவின் தலையிலுள்ள பானையை உடைத்ததால் அக்ஷரா மனம் வருந்தி அழும் காட்சிகளோடு இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பிரியங்கா தன்னை கேப்டனாக்க வேண்டும் என்று கூறும்போது இந்த வாயாடியை யாரும் கேப்டனாக்க வேண்டாம் என்றும் நிரூப் தடுக்கின்றார்.

More News

நாளை சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை: முதல்வர் அறிவிப்பு

நாளை சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். 

சென்னைக்கும் இன்னும் கனமழை காத்திருக்கு: வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்!

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டு உள்ளதால்

முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவர்: முக ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன கமல்ஹாசன்

முதல்வர்களில் நீங்கள்தான் முன்னுதாரணமாக திகழ்கிறீர்கள் என உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார்

க்யூட் சிஸ்டர்ஸ்… பேபி ஷாலினி- ஷாமிலி அழகிய புகைப்படம் வைரல்!

தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக இருந்தவர்

ஸ்கூட்டரை போனஸாக வழங்கிய நிறுவனம்… ஆடிப்போன ஊழியர்கள்!

சூரத்தில் செயல்பட்டுவரும் நிறுவனம் ஒன்று தங்களுடைய ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தீபாவளி போனஸாக கொடுத்து அசத்தியிருக்கிறது