இந்த வாரம் பாலாஜிக்கு குறும்படம் உண்டா? கமலிடம் எதிர்பார்க்கும் பார்வையாளர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் வாக்குவாதங்கள் அதிகரித்து வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஒரு வாக்குவாதத்தில் பாலாவை போட்டியாளர்கள் சிலர் ரவுண்டு கட்டி வாக்குவாதம் செய்தனர்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பாலாஜி, யார் யாரெல்லாம் ஹீரோ, ஹீரோயின் ஆகனுமோ, அவங்க எல்லாம் என்னுடன் சண்டைக்கு வாருங்கள் என சொடக்கு போட்டு கூறினார். ஆனால் நேற்று ஆரியிடம் வாக்குவாதம் செய்தபோது ’தான் அவ்வாறு கூறவில்லை என்று பாலாஜி கூறினார். சனம், அனிதா ஆகியோர்கள் பாலாஜி கூறியது உண்மைதான் என ஆரிக்கு சப்போர்ட் செய்தும் ஒரு கட்டத்தில் தான் அவ்வாறு கையை மேலே தூக்கி சொடக்கு போட்டு சொல்லவில்லை என்றும் சாதாரணமாகத்தான் சொன்னதாகவும் பாலாஜி சமாளித்தார்.
இந்த நிலையில் நெட்டிசன்கள் குறும்படம் போட்டு பாலாஜி கூறியதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளனர். அதில் பாலாஜி சொடக்கு போட்டு சொன்ன காட்சி உள்ளது. இதனையடுத்து இந்த வாரம் பாலாஜிக்காக கமலஹாசன் குறும்படம் போடுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறும்படம் என்பது சுவராசியமான ஒன்றாகும். முதல் சீசனில் இருந்து அவ்வப்போது தேவையான நேரத்தில் குறும்படங்களை போட்டு அசத்தி வந்த கமலஹாசன், பிக்பாஸ் சீசன் 4 தொடங்கி 50 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் குறும்படம் எதையும் அவர் போடவில்லை. அதுமட்டுமின்றி போட்டியாளர்கள் எந்தத் தவறு செய்தாலும் கண்டிப்பு இல்லாமல் அமைதியாகவே அவர் அறிவுரை என்ற பெயரில் டிப்ஸ் மட்டுமே கூறி வருகிறார். இதனால் போட்டியாளர்களுக்கு குளிர்விட்டுபோய் எல்லை மீறி செல்வதாக தெரிகிறது.
இதனை அடுத்து கமல்ஹாசன் மீண்டும் தன் சுயரூபத்தை காண்பித்து தவறு செய்யும் போட்டியாளர்களை கண்டிக்கும் வகையில் குறும்படம் போட்டு பாலாஜியின் அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே பார்வையாளர்களின் விருப்பமாக உள்ளது.
Idha thane da nee indaki episode la sonnai ipdi pannave illa endu...#fakebalaji #BiggBossTamil #BiggBossTami4 #bigbosstamil4 #BigBoss4Tamil #BBTamilSeason4 pic.twitter.com/gUVWbve5Ai
— Shafni (@shafni_15) November 25, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com