சிங்கிளாக நிற்கும் சிங்கம்: மக்கள் மீதான நம்பிக்கையா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் ஆரி, அனிதா, பாலாஜி, சுரேஷ் மற்றும் ஆஜித் ஆகிய ஐவர் உள்ளனர் என்பது தெரிந்ததே. இதில் ஆஜித் கைவசம் எவிக்சன் பாஸ் இருப்பதால் மக்கள் ஓட்டு போடவில்லை என்றாலும் அவர் வெளியேற மாட்டார். எனவே ஆரி, அனிதா, பாலாஜி, சுரேஷ் ஆகிய நால்வரில் ஒருவர் தான் வெளியேறவுள்ளார்.

இந்த நிலையில் இன்று போட்டியாளர்கள் தங்களுக்கு தாங்களே தங்களுடைய இடத்தை முடிவு செய்யும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. ஒன்று முதல் 16 வரை வைக்கப்பட்டுள்ள வரிசையில் ஒன்று என்பது பிக்பாஸ் வெற்றியாளரையும், 16 என்பது இந்த வாரம் வெளியேறுபவரையும் குறிக்கும் என டாஸ்க்கில் குறிப்பிடப்பட்டுள்ளது

மற்ற போட்டியாளர்கள் எல்லாம் அவரவர் எண்ணத்திற்கேற்ப நம்பரை கூறிக்கொண்டு வரும் நிலையில் சுரேஷ் மட்டும் எந்தவித தயக்கமும் இன்று 16ஐ தேர்வு செய்கிறார். அவரை தவிர மற்றவர்கள் தங்களுடைய எண்ணை தேர்வு செய்வதில் குழப்பத்தில் இருப்பதால் சிங்கம் சுரேஷ் தனியாக நிற்கிறார்.

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் எண்ணில் அவர் நின்றாலும், மக்கள் தனக்கு ஓட்டு போட்டு தன்னை கடைசி வரை கொண்டு சேர்ப்பார்கள் என்ற அதீத நம்பிக்கையில் அவர் நிற்பது அவரது முகத்தில் தெரிகிறது. ஒட்டுமொத்த போட்டியாளர்களும் குழப்பத்தில் இருக்கும் நிலையில் சிங்கம் சிங்கிளாக பட்டைய கிளப்பி வருகிறார்