close
Choose your channels

விஜய் அம்மாவை சந்தித்த 'பிக்பாஸ்' சீசன் 3 நடிகை

Sunday, October 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 3 இதுவரை நடந்த சீசன்களில் இருந்து வித்தியாசமாக இருந்தது. இந்த சீசனின் வின்னராக முகின் இருந்தாலும் முகினின் வெற்றியை சக போட்டியாளர்களே கொண்டாடியது குறிப்பாக இரண்டாமிடம் பெற்ற சாண்டி கொண்டாடியது இதுவரை பார்க்காத ஒன்று. மேலும் இந்த சீசனில் தான் போட்டியாளர்களிடையே உண்மையான நட்பும், காதலும் உறவும் உருவானது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 3 முடிவடைந்தாலும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சக போட்டியாளர்களின் வீடுகளுக்கு சென்று சந்தித்து தங்களது நட்பை தொடர்ந்து வருகின்றனர். குறிப்பாக அபிராமி, கிட்டத்தட்ட அனைவரையும் சந்தித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் அவர்களை சந்தித்துள்ளார். ஷோபாவை அபிராமி சந்தித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ‘தல’ அஜித்துடன் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்த அபிராமி, தளபதியின் தாயாரை சந்தித்துள்ளதால் இருதரப்பு ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment