எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க... சூடு வைத்த பிக்பாஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் போட்டியாளர்கள் தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்ற விதி உள்ளது என்பதும் பெரும்பாலான போட்டியாளர்களுக்கு தமிழ் தெரிந்தாலும் ஆங்கிலத்தில் ஒருசில போட்டியாளர்கள் பேசி வருவார்கள் என்பதும் தெரிந்ததே
கடந்த ஐந்து சீசன்களில் ஆங்கிலத்தில் பேசிய சில போட்டியாளர்களை பிக்பாஸ் கண்டித்துள்ளார் என்பதும் சில சமயம் தண்டனையும் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்களில் ஒருவரான ஆயிஷா தனது சக போட்டியாளர் ஷெரினாவிடம் மலையாளத்தில் பேசியுள்ளார். இதனை அறிந்த பிக்பாஸ் ஆயிஷா, ஷெரினா இருவரும் தமிழில் மட்டும் சம்சாரிக்கவும் என கூறினார். இதனை அடுத்து சக போட்டியாளர்கள் கரகோஷம் எழுப்பி நிலையில் ஆயிஷாவும் ஷெரினாவும் அதனை ஏற்றுக்கொண்டு கைதட்டினர்
பிக்பாஸ் என்பது ஒரு தமிழ் நிகழ்ச்சி என்பதால் தமிழ் பார்வையாளர்கள் அதிகமாக பார்க்கின்றனர். எனவே தான் தமிழில் மட்டுமே போட்டியாளர்கள் பேச வேண்டும் என்ற விதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மலையாளத்தில் பேசிய ஆயிஷாவுக்கு பிக்பாஸ் சூடு வைத்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் திருப்தியை அளித்துள்ளது.
I'm a Malayali, but it felt so wrong to see Ayesha and Sherina talk for too long in Malayalam. It's the utmost disrespect to the audience. I would feel the same if I saw 2 contestants of Malayalam BB carry on a conversation in Tamil. Well done by BB to warn them.#BiggBossTamil6 pic.twitter.com/5wuPFp25h5
— Bigg Boss Videos & Updates (@BBFollower7) October 24, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments