இந்த புத்திசாலித்தனத்தை டாஸ்க்குல காட்டுங்க: ரம்யாவை கண்டித்த பிக்பாஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் தினமும் மூன்று புரமோ வீடியோக்கள் விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் என்பதும் அந்த புரமோ வீடியோக்கள் நிகழ்ச்சியை பார்க்க தூண்டும் வகையில் சுவராஸ்யமாக இருக்கும் என்பதும் தெரிந்ததே
அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள புரமோ வீடியோக்களும் வழக்கம்போல் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சற்று முன் அன்சீன் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது இந்த வீடியோவில் கன்பெக்சன் அறையில் ரியோ உட்கார்ந்து சில கேள்விகளை பிக்பாஸிடம் கேட்கிறார்
புதிய மனிதா டாஸ்க்கில் ரோபோக்களாக விளையாடுபவர்கள் இடையில் சாப்பிடலாமா? மனிதர்களிடம் கேட்காமல் சாப்பிட சென்றால் ஏதேனும் தண்டனை உண்டா? என்ற கேள்வி கேட்கிறார். அப்போது பிக்பாஸ் ’இந்த கேள்வியை உங்களிடம் யார் கேட்க சொன்னது? என கேட்க, ’ரம்யா கேட்க சொன்னதாக கூறுகிறார் ரியோ. உடனே பிக்பாஸ் அதற்கு ’இந்த புத்திசாலித்தனத்தை டாஸ்க்கில் காட்டச் சொல்லுங்கள் என்று கண்டிப்புடன் கூறுகிறார்
மேலும் சில கேள்விகளை கேட்க ரியோ முயற்சி செய்தபோது இந்த டாஸ்க்கை சுவராசியமாக நடத்த முயற்சி செய்யுங்கள், குட்பை என்று கூறி அவரை வழியனுப்பி வைக்கிறார். இதனை அடுத்து ஐயா சாமி ஆள விடுங்க என்று ரியோ கன்பக்சன் அறையில் இருந்து தப்பித்து செல்வதுடன் அந்த அன்சீன் வீடியோ முடிவடைகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments