ரஜினி பாட்டுக்கு குத்தாட்டம்: போலீசை பார்த்ததும் பம்மி ஓடிய சாண்டி!

  • IndiaGlitz, [Tuesday,April 28 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்டுக்கு லண்டன் மால் ஒன்றில் குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் போட்டியாளரும் டான்ஸ் மாஸ்டருமான சாண்டி, போலீசை பார்த்ததும் பம்மி ஓடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நடிகர், நடிகையர் உள்பட திரையுலகினர் அனைவரும் படப்பிடிப்பு இல்லாததால் வீட்டில் இருந்து கொண்டு தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வேடிக்கையான வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோக்களுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிக்பாஸ் புகழ் சாண்டி, லண்டன் மால் ஒன்றில் ‘பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்தை’ என்ற ’பேட்ட’ ரஜினியின் பாடலுக்கு லுங்கியுடன் நடனம் ஆடினார். அப்போது திடீரென போலீஸ் வாகனத்தை பார்த்ததும் லுங்கியால் தன்னை மறைத்து கொண்டு பம்மி ஓடிய காட்சி இந்த வீடியோவில் உள்ளது.

சாண்டி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
 

View this post on Instagram

Ayo police-u ?? fun time in london

A post shared by SANDY (@iamsandy_off) on Apr 27, 2020 at 4:14am PDT

More News

இந்தியாவில் 29 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: ஊரடங்கையும் மீறி உயர்வதால் பரபரப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை நாள்தோறும் சுமார் ஆயிரம் வரை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை

பரிட்சையில் பாஸ் ஆயிருங்க, போலீசை ஏமாத்தாதிங்க: வடிவேலு

கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை ஏற்கனவே தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள வைகைப்புயல் வடிவேலு தற்போது புதிய வீடியோ ஒன்றில்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலகின் முக்கிய விளையாட்டு வீரர்கள்!!!

கொரோனாவால் ஒலிம்பிக் உள்ளிட்ட பல முககிய விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு அல்லது ஒத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலகின் சினிமா பிரபலங்கள்!!!

கொரோனா வைரஸ் தொற்றால் பல முக்கியத் திரைப்படக் கலைஞர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு.

இதுவரை உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசியல் வாதிகள்!!! தற்போதைய நிலைமை என்ன???

கொரோனா நோய்த்தொற்று பரவல் விகிதம் ஏழை நாடுகளைவிட பணக்கார நாடுகளில் அதிகமாக இருக்கிறது.