பிக்பாஸ் சம்யுக்தாவுக்கும் பாவனாவுக்கும் என்ன உறவு? வைரல் புகைப்படம்
- IndiaGlitz, [Thursday,March 04 2021]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவராகிய சம்யுக்தாவும் விஜய் டிவி தொகுப்பாளினி பாவனாவும் அடிக்கடி இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து இவர்கள் இருவரும் சகோதரிகளா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வந்தனர்.
ரசிகர்களின் இந்த கேள்விக்கு தனது இன்ஸ்டாவில் பதில் கூறிய பாவனா, ‘சம்யுக்தா எனது சொந்த சகோதரி இல்லை, ஆனால் அவர் என்னுடைய இன்னொரு அம்மா மூலம் கிடைத்த சகோதரி என்று கூறியுள்ளார்.
இதே கேள்வியை சம்யுக்தாவிடம் ரசிகர்கள் கேட்டபோது அந்த கேள்விக்கு பதில் கூறிய சம்யுக்தா, ‘பாவனா என்னுடைய சகோதரி இல்லை என்றாலும் அவர் என்னுடைய பள்ளியின் சீனியர் மாணவி. நாங்கள் இருவரும் பக்கத்து பக்கத்து வீடுகளில் தான் குடியிருந்தோம். மும்பையில் இருக்கும் பாவனாவின் உறவினர்கள் தற்போது கொரோனா பிரச்சினை காரணமாக என்னுடைய வீட்டில் தான் தங்கி இருந்தார்கள். எனவே அவரை எனக்கு நன்றாக தெரியும்’ என்று கூறியுள்ளார்.