விஷாலின் அடுத்த படத்தில் பிக்பாஸ் 3 நடிகை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவராகிய சாக்சி, கவின் மீது காதல் கொண்டு அதன்பின் அந்த காதலை முறித்து கொண்டு சர்ச்சைக்குரியவராக மாறினார். அதன்பின்னர் சிறப்பு விருந்தினராக சென்று கவின் மற்றும் லாஸ்லியாவிடம் மோதல் போக்கை கடைபிடித்தார்.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தாலும் சாக்சிக்கு தான் தற்போது முதல் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே காலா’ உள்பட ஒருசில படங்களில் நடித்த சாக்சி தற்போது டப்பிங் கலைஞராக மாறியுள்ளார்.

ஆம், விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள ‘ஆக்சன்’ படத்தில் சாக்சி டப்பிங் பேசியுள்ளார். இந்த தகவலை சாக்சி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இதுவரை நடிகையாக மட்டும் இருந்த சாக்சியை இனிமேல் பல படங்களில் டப்பிங் பேசும் கலைஞராகவும் பார்க்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிக்பாஸ் வீட்டில் அப்பா-மகள் உறவு: சேரனின் விளக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய சேரன், சக போட்டியாளர் லாஸ்லியா மீது அப்பா பாசத்தை பொழிந்தார் என்பதும், ஒரு அப்பா, தனது மகள் மீது பாசத்தையும்

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த 'பில்லா பாண்டி' நாயகி

இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு 'பொம்மை' என்ற டைட்டில் வைக்க படக்குழுவினர்

கலைஞானத்திற்கு கொடுத்த வீடு லதா ரஜினி பெயரில் உள்ளதா?

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தன்னை முதன்முதலாக ஹீரோவாக்கி அழகு பார்த்த பழம்பெரும் தயாரிப்பாளர் கலைஞானம் அவர்களுக்கு வீடு ஒன்றை பரிசாக அளித்தார் என்பது தெரிந்ததே 

ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்து மாஸ் அப்டேட்

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் 'பூமி' மற்றும்' ஜனகனமன' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் 

விக்ரம் அடுத்த படத்திலும் இணைந்த ஒரு கிரிக்கெட் பிரபலம்

சந்தானம் நடித்து வரும் 'டிக்கிலோனா' திரைப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானதை சற்றுமுன் பார்த்தோம்.