கமல்ஹாசனிடம் சொன்னதை செய்த ரியோ: வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது கமல்ஹாசனிடம் கூறிய ஒரு வாக்குறுதியை ரியோ ராஜ் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே வந்ததும் நிறைவேற்றியுள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி போட்டிக்கு தேர்வு பெற்ற ஐந்து பேர்களிடம் கமல்ஹாசன் வெளியே சென்றதும் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார். அப்போது ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்தை கூறிய நிலையில் ரியோ ராஜ் மட்டும் வெளியே சென்றதும் வண்டியை எடுத்துக்கொண்டு ஏதாவது காட்டு பகுதிக்கு டிரக்கிங் சென்றுவிடுவேன் என்றும் நிம்மதியாக சில நாட்கள் பொழுதை கழிப்பேன் என்று கூறியிருந்தார்
இந்த நிலையில் ரியோராஜ்க்கு கமல்ஹாசன் தன்னுடைய சார்பில் பரிசு அளிக்கும் போது டெண்ட் ஒன்றை கொடுத்தார். டிரெக்கிங் செல்லும் போது இது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது காட்டுக்கு டிரக்கிங் செல்வேன் என்று கூறிய ரியோ ராஜ் தற்போது அதனை நிறைவேற்றியுள்ளார். இது குறித்த வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
To another world ?? pic.twitter.com/3n959bBvuU
— Rio raj (@rio_raj) January 28, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments