ரகசியத்தை வெளியிட்ட பிக்பாஸ் ரம்யா: வைரலாகும் புகைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பின்னணி பாடகியும், கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் அவர்களின் பேத்தியுமான ரம்யா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் தமிழகம் முழுவதும் புகழ் பெற்றார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே ரம்யாவின் உடல் எடை அதிகரித்து வருவதாக பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்குரிய பதிலை விரைவில் கூறுவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த ரகசியத்தை சற்று முன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடந்த சில நாட்களாகவே என்னிடம் நிறைய பேர் ’நீங்கள் ஏன் இவ்வளவு திடீரென உடல் எடை அதிகரித்துள்ளீர்கள்’ என்று கேட்டார்கள். மீண்டும் மீண்டும் அவர்கள் கேட்ட இந்த கேள்விக்கு நான் இப்போது பதில் கூறுகிறேன். நான் ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளேன் என்பதை உங்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதனால்தான் எனது உடல் வெயிட் ஏறியது. ஆனால் இனிமேல் எனது உடல் நலத்தை பேணி, உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு உடல் எடையை குறைக்க போகிறேன் என்று கூறியுள்ளார்
மேலும் குழந்தை மற்றும் கணவருடன் ரம்யா இருக்கும் புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் சத்யாவை ரம்யா திருமணம் செய்து கொண்டார் என்பதும் இது ஒரு காதல் திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout