நீங்கள் பார்ப்பது கொஞ்சம் தான், உள்ளே நடப்பதே வேற! பிக்பாஸ் ரம்யா
- IndiaGlitz, [Monday,July 23 2018]
பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று எலிமினேட் ஆனவர் ரம்யா. பார்வையாளர்களுக்கும், வாக்கு அளித்தவர்களுக்கும் இந்த முடிவு எதிர்பாராத முடிவாகத்தான் இருந்தது. இனிமேல் பிக்பாஸ் வாக்கெடுப்பில் கலந்து கொள்வதே வேஸ்ட் என்ற அனுபவத்தை கடந்த இரண்டு வாரங்களாக பார்வையாளர் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் உள்ளே இருக்கும்போது ரம்யாவுக்கு கிடைக்காத பார்வையாளர்களின் ஆதரவு அவர் வெளியே வந்தவுடன் கொஞ்சம் அதிகமாகவே கிடைத்தது. பெரும்பாலானோர் அவரது வெளியேற்றத்தை ஏற்று கொள்ளவில்லை.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள ரம்யா தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்றும், தனக்கு இவ்வளவு ஆதரவு இருக்கின்றது என்பதை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார். மேலும் அந்த வீட்டில் இதற்கு மேல் தன்னால் இருக்க முடியாது என்றும் வெளியே வந்தது தனக்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சியே என்றும் கூறியுள்ளார்.
மேலும் நீங்கள் பார்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருமணி நேரம்தான் என்றும், ஆனால் அந்த வீட்டில் 24 மணி நேரமும் சண்டை, போட்டி, பொறாமை ஆகியவைகள் தான் அதிகம் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
Thank you so much everybody for all the love and support. I am completely overwhelmed. Love you all! ❤️ pic.twitter.com/0GWBPqGiFp
— Ramya NSK (@SingerRamya) July 23, 2018