10 வருட சேலஞ்ச்: பிக்பாஸ் ரம்யாவின் 60 கிலோ மாற்றம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக 10 வருட சேலஞ்ச் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது தெரிந்ததே. குறிப்பாக கோலிவுட் திரையுலகினர் தங்களது பத்து வருடங்களுக்கு முந்தைய புகைப்படங்களையும் தற்போதைய புகைப்படங்களையும் பதிவு செய்து வருகின்றனர். இதில் பெரும்பாலான நட்சத்திரங்கள் பத்து வருடங்களுக்கு முன் ஒல்லியாகவும் தற்போது கொஞ்சம் குண்டாகவும் உள்ளனர்.
இந்த நிலையில் பத்து வருடங்களுக்கு முன் 120 கிலோ எடையுடன் இருந்த பிக்பாஸ் புகழ் ரம்யா, தற்போது 60 கிலோ எடையாக இருப்பதாகவும், பாதி எடையை குறைத்ததே தன்னுடைய மிகப்பெரிய சாதனை என்றும் பதிவு செய்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ரெகுலராக ஜிம் சென்று, உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்ததால் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்துள்ளதாகவும், தற்போது உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் ரம்யா தெரிவித்துள்ளார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிக்க வாய்ப்பு வருவதாகவும் ஆனால் தனக்கு நடிப்பதை விட இசையில் தான் அதிக நாட்டம் என்பதால் எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
#10YearChallenge ❤️ pic.twitter.com/WaNH1ihjQQ
— Ramya NSK (@SingerRamya) January 20, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments