சூர்யாவின் அடுத்த படத்தில் பிக்பாஸ் ரம்யா பாண்டியன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் வின்னராக ஆரியும், ரன்னராக பாலாஜியும் வெற்றி பெற்றார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ஐவரில் ஒருவர் ரம்யா பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி டிக்கெட் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் சிங்கப்பெண் என்ற பட்டத்தையும் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து தற்போது பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியும் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் பிக்பாஸ் சிங்கப்பெண் ரம்யாவுக்கு புதிய திரைப்பட வாய்ப்பு ஒன்று வந்துள்ளது
ஏற்கனவே ’ஜோக்கர்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த ரம்யா பாண்டியன் தற்போது சூர்யாவின் படத்தில் நடிக்க உள்ளா. அதாவது சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் இதனை தான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த வாய்ப்பை கொடுத்த 2டி நிறுவனத்திற்கும் படக்குழுவினர்களுக்கும் நன்றி என ரம்யா பாண்டியன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தை அரசில் என்பவர் இயக்க இருப்பதாக தெரிகிறது
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சூர்யாவின் தயாரிப்பில் நடிக்க ரம்யா பாண்டியனுக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதை அடுத்து சூர்யா ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
I'm happy to officially announce my next project with @2D_ENTPVTLTD @rajsekarpandian sir. Special thanks to @Suriya_offl sir and the entire team for this wonderful opportunity pic.twitter.com/TLwgqNMFoU
— Ramya Pandian (@iamramyapandian) January 27, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com