'நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்? பிக்பாஸ் ராம் ராமசாமியின் காதலி இவர் தானா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ராம் ராமசாமி இளம் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ’நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்’ என்று கூறியிருப்பதை அடுத்து அந்த இளம் பெண் அவருடைய காதலியா? என்ற கேள்வியை ரசிகர்களை எழுப்பி வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிய அளவில் மெனக்கெடாமல் கிட்டத்தட்ட பாதி நேரம் தூங்கியே கழித்தவர் ராம் ராமசாமி என்ற விமர்சனம் எழுந்தது உண்டு. மேலும் குயின்சி, நிவாஷினி, ஜனனி போன்ற இளம் போட்டியாளர்களுடன் அவர் நெருக்கமாக பழகினாலும், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஜென்டில்மேன் என்ற பெயரும் பெற்றார்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 63 வது நாளில் வெளியேறிய அவர் சமீபத்தில் ஒரு ஆல்பம் பாடலில் நடித்தார். இந்த பாடலில் தன்னுடன் நடித்தவரையே அவர் காதலிப்பதாகவும் அவருடைய புகைப்படத்தை தான் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
இருவரும் உண்மையிலேயே காதலிக்கிறார்களா? அல்லது அடுத்த ஆல்பம் பாடலுக்கு கொடுத்த போஸ் இதுவா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments