இந்த உறவுக்கு உலகத்தில் பெயர் இல்லை... பிக்பாஸ் பிரபலத்தின் மடியில் ரக்சிதா.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள், பிக்பாஸ் வீட்டில் விளையாடும் போது ஒருவருக்கு ஒருவர் போட்டியுடன், ஆவேசமாக சண்டை போட்டுக் கொண்டாலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் அனைவரும் நட்புடன் இருக்கிறார்கள் என்பதை பல சீசன்களில் பார்த்திருக்கிறோம்.
அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் இன்றும் நட்பில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவின் உடன் ரக்சிதா மஹாலக்ஷ்மி நெருக்கமாக உள்ளார் என்பதும் இருவரும் அவ்வப்போது வெளியே செல்லும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஷிவின் மடியில் ரக்சிதா படுத்திருக்கும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவுக்கு ’இந்த உறவுக்கு உலகத்தில் பெயர் இல்லை’ என்றும் கேப்ஷனாக ரக்சிதா பதிவு செய்துள்ளார். மேலும் இந்த வீடியோவின் பின்னணியாக ‘காதல் கொண்டேன்’ என்ற படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா கம்போஸ் செய்த ‘நெஞ்சோடு கலந்திடு’ என்ற பாடல் ஒலிக்கின்றது. இந்த வீடியோவுக்கு ஏராளமான ஒரு கமெண்ட், லைக் குவிந்து வருகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com