தமிழ் புத்தாண்டு தினத்தை வித்தியாசமாக கொண்டாடிய பிக்பாஸ் ரக்ஷிதா.. குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Saturday,April 15 2023]

நேற்று தமிழ் புத்தாண்டு தினத்தை திரை உலக பிரபலங்கள் மற்றும் சின்ன திரைப்படங்கள் கொண்டாடினர் என்பதும் அது குறித்த புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தனர் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரக்ஷிதா நேற்று தமிழ் புத்தாண்டு தினத்தில் புத்தம் புதிய கார் வாங்கி வித்தியாசமாக கொண்டாடியதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ஒருவர் ரக்ஷிதா என்பதும் அவர் 91 நாட்கள் வரை இந்த நிகழ்ச்சியில் தாக்குப்பிடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது ரக்ஷிதா மற்றும் நடன இயக்குனர் ராபர்ட் ஆகிய இருவருக்கும் காதல் என்று வதந்தி கிளம்பினாலும் எங்கள் இருவருக்கும் இடையே உண்மையான நட்பு தான் இருக்கிறது என்று இருவரும் பேட்டி அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தனது சக போட்டியாளர்கள் உடன் தொடர்பில் இருந்த ரக்ஷிதா தற்போது தமிழ் புத்தாண்டு தினத்தில் புத்தம் புதிய கார் வாங்கிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். புத்தாண்டில் புதிய ஆரம்பம் என்று அவர் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த பதிவுக்கு வாழ்த்து தெரிவித்து ஏராளமான கமெண்ட்ஸ் லைக் குவிந்து வருகிறது.

More News

21 வருடங்களுக்கு முன் இதே நாளில் நடந்த சோகம்.. நடிகை சிம்ரனின் உருக்கமான பதிவு..!

 21 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் தனது தங்கை மோனல் தன்னை விட்டு மறைந்து விட்டார் என்று உருக்கமான பதிவை நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவுக்கு ரசிகர்கள்

சில்லுன்னு ஒரு காதல்' குட்டி பெண்ணா இவர்? இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

சூர்யா ஜோதிகா நடித்த 'சில்லுனு ஒரு காதல்' திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தில் சூர்யா ஜோதிகாவின் மகளாக நடித்திருந்த ஸ்ரேயா சர்மா தற்போது ஒரு வழக்கறிஞராக

விஜய் சேதுபதியின் 50வது படம் குறித்த மாஸ் தகவல்.. ரசிகர்கள் உற்சாகம்..!

 நடிகர் விஜய் சேதுபதி 50வது படம் என்ற மைல் கல்லை நெருங்கி இருக்கும் நிலையில் அந்த படத்தில் ஒரு புதுமை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தோனியின் தமிழ்.. அழகாகத்தான் இருக்குது..!

தல தோனி தமிழில் பேசிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் தோனியின் தமிழ் பேச்சு அழகாகத்தான் இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர் 

ஆபத்தான பொசிஷன்… விபரீத ஆசையில் ஆண் உறுப்பை உடைத்துக் கொண்ட இளைஞர்!

இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பார்னருடன் உடலுறவு மேற்கொண்டபோது ஆணுறுப்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.