60 வயது அரசியல்வாதிக்கு ஜோடியாக நடித்த ரக்சிதா மகாலட்சுமி.. இன்று ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Friday,March 08 2024]

தொலைக்காட்சி சீரியல் நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் ரக்சிதா மகாலட்சுமி, 60 வயது அரசியல்வாதிக்கு ஜோடியாக நடித்த திரைப்படம் இன்று வெளியாகிறது.

நடிகை ரக்சிதா மகாலட்சுமி பல சீரியல்கள் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக ’பிரிவோம் சந்திப்போம்’ ’இளவரசி’ ’சரவணன் மீனாட்சி’ ’நாச்சியார்புரம் உள்ளிட்ட சீரியல்களில் அவரது கேரக்டர் மக்கள் மனதில் பதியும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி ஒரு சில திரைப்படங்களிலும் ரக்சிதா நடித்துள்ளார், தற்போது கூட மூன்று தமிழ் படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ரக்சிதா மகாலட்சுமிக்கு பல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் கன்னட படம் ஒன்றில் அவர் கடந்த சில மாதங்களாக நடித்து வந்தார். ’ரங்கநாயகி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் ஜக்கேஷ் என்பவர் ஹீரோவாக நடித்த நிலையில் அவருக்கு ஜோடியாக தான் ரக்சிதா மகாலட்சுமி நடித்துள்ளார்.

60 வயதான ஜாக்கென தற்போது பாராளுமன்ற எம்பி ஆக இருக்கிறார் என்பதும் இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கன்னடத்தில் அறிமுகமான முதல் படத்திலேயே 60 வயது அரசியல்வாதிக்கு ஜோடியாக நடித்துள்ள நிலையில் அவருக்கு மற்றொரு கன்னட படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

ரக்சிதா தமிழில் ’மெய் நிகரே’ ’ஃபயர்’ உட்பட மூன்று படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

அஜித்துக்கு அறுவை சிகிச்சை நடந்தது மூளையில் அல்ல.. மேனேஜர் சுரேஷ் சந்திரா விளக்கம்..!

நடிகர் அஜித்துக்கு மூளையில் அறுவை கிச்சை நடந்ததாக நேற்று இரவு முதல் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அந்த செய்தியை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்கள் மறுத்துள்ளார்.

கோடி ரூபாய் கொடுத்தாலும் அம்பானி வீட்டு திருமணத்தில் நடனமாட மாட்டேன்: 'சந்திரமுகி 2' நடிகை..!

சமீபத்தில் நடந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகினரும் கலந்து கொண்டு டான்ஸ் ஆடிய நிலையில்

குடிதண்ணீரை வீணாக்கினால் ரூ.5000 அபராதம்.. கோடை தொடங்கும் முன்பே தலைவிரித்தாடும் பஞ்சம்..!

கர்நாடக மாநிலத்தில் தற்போது தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுவதாகவும் இந்த நிலையில் குடிதண்ணீரை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தினால் அல்லது வீணாக்கினால்

வதந்திகளை ஒரே ஒரு புகைப்படத்தால் அடித்து நொறுக்கிய நயன்தாரா.. நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு பயணம்..!

நடிகை நயன்தாரா தனது கணவரை பிரியப் போகிறார் என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிய நிலையில் இந்த வதந்திகளை ஒரே ஒரு புகைப்படத்தை பதிவு செய்து அடித்து நொறுக்கி

அடுத்தடுத்து இரண்டு பிரபலங்களை இயக்கும் மாரி செல்வராஜ்.. அப்ப ரஜினி படம் டிராப்பா?

இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரம் படத்தை இயக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் அடுத்தடுத்து இரண்டு பிரபல நடிகர்களின் படங்களை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.