ஃபேஸியலால் முகவீக்கம்: ரைசாவின் டாக்டர் அளித்த விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் சமீபத்தில் ஃபேஸியல் செய்யப் போனபோது அவருக்கு தோல் மருத்துவர் வேறுசில விஷயங்களை செய்ததாகவும், அதனால் அவரது முகம் வீங்கி விட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து தான் டாக்டரை தொடர்பு கொள்ள முயன்றபோது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரது உதவியாளர் அவர் வெளியூர் சென்று விட்டதாக கூறியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் ரைசாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பைரவி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பொதுவாக இரு பக்கமும் சீரான அளவில் இல்லாத முக அமைப்பை சீர்செய்யும் Dermal Fillers என்ற சிகிச்சை முறை தான் ரைசாவுக்கு அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையை ஏற்கனவே ஒருமுறை ரைசா எடுத்துக் கொண்டார். அதனை தொடர்ந்து தான் தற்போது மீண்டும் அதே வகை சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது.
இந்த சிகிச்சையால் ஒரு வாரம் முகம் வீக்கமாக இருக்கும், பின்னர் சரியாகிவிடும். ஆனால் ரைசா முகம் வீங்கியதால் என்னிடம் பணம் கேட்டு மிரட்டி வருகிறார்’ என்று குற்றம்சாட்டியுள்ளார். மருத்துவர் பைரவியின் இந்த குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments