என் போட்டோவுக்கு கமெண்ட் போடறதை விட்டுட்டு உருப்படியா ஏதாச்சும் செய்யுங்க: பிக்பாஸ் ரைசா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளார் என்பதும் அவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இன்ஸ்டாவில் வைரலாகி வரும் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் ரைசா பதிவு செய்த உச்சகட்ட கிளாமர் புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டன் இல்லாத மேலாடை அணிந்திருந்த இந்த புகைப்படத்திற்கு கேலியும் கிண்டலும் செய்து ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவு செய்ததை அடுத்து இந்த கமெண்ட்ஸ்களுக்கு ரைசா தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.
கமெண்ட் விஷயத்தில் நீங்கள் உங்களுடைய வெறுப்பை உமிழ்கிறீர்கள் என்றால் நீங்கள் எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர் என்று அர்த்தம். இதே மாதிரி எண்ணங்களுடன் நீங்கள் வாழ்ந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. உங்கள் வாழ்க்கையும் எதிர்மறை எண்ணங்களை எடுத்துச் சொல்லும். இதுபோன்ற கமெண்ட்ஸ்களை நான் படிப்பது இல்லை, படித்தாலும் கண்டுகொள்வதில்லை.
நடிகை ஒருவர் பிகினி அணிவது என்பது வழக்கமான ஒரு விஷயம். இதற்கு கமெண்ட்ஸ் செய்வதை விட்டுவிட்டு கல்வி போன்ற உருப்படியான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். எனக்கு விருப்பமானவற்றை அணிவதற்கு எனக்கு உரிமை உண்டு, மற்றவர்கள் அது குறித்து கமெண்ட்ஸ் செய்தால் எனக்கு கவலை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments