பிக்பாஸ் ரைசா அடுத்த படத்தில் கனெக்சன் ஆன 'மாஸ்டர்' லோகேஷ் கனகராஜ்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் ரைசா அடுத்த படத்தில் கனெக்சன் ஆன ‘மாஸ்டர்’ லோகேஷ் கனகராஜ்.
தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’திருடன் போலீஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனரான இயக்குனர் கார்த்திக் ராஜூ, தற்போது ’சூர்ப்பனகை’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இதனை அடுத்து கார்த்திக் ராஜு இயக்கும் அடுத்த படத்தில் பிக்பாஸ் ரைசா வில்சன் முக்கிய நடிக்க உள்ளதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தான் சற்றுமுன் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கார்த்திக் ராஜு இயக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு ’தி சேஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் ஒரு அடர்ந்த காட்டில் ரைசா ஒரு மரத்தில் தலைகீழா கட்டி தொங்கவிடப்பட்டது போல் இருப்பதால் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போஸ்டரை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த ‘மாஸ்டர்’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். குறிப்பாக தயாரிப்பாளர் சதீஷுக்கு ‘வாழ்த்துக்கள் மச்சி’ என்று தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் ரைசா, ஹரிஷ் உத்தமன், பாலசரவணன் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசை அமைக்க உள்ளார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
Congrats Machi ?? @sathishoffl #TheChase Directed by @caarthickraju ??
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 1, 2020
Starring @raizawilson @anasuyakhasba @harishuthaman @Bala_actor @Satyamrajesh2
@VelrajR @SamCSMusic @dhilipaction @editorsabu @tuneyjohn @proyuvraaj #AppleTreeStudios #RajShekarVarma #TheChaseFirstLook pic.twitter.com/vg64oUyqqS
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com