கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதியை ஒப்பிடலாமா? பிக்பாஸ் ரச்சிதா கூறிய பரபரப்பு தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,September 24 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8வது சீசனை அவர் தொகுத்து வழங்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில், விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். வரும் அக்டோபர் 6ஆம் தேதி இந்த நிகழ்ச்சி ஆரம்பமாக இருக்கும் நிலையில், கமல்ஹாசனுக்கு இணையாக விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளர் ரச்சிதா மகாலட்சுமி இது குறித்து தனது கருத்தை கூறியுள்ளார், இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது:

நான் கமல்ஹாசன் அவர்களின் தீவிர ரசிகை. இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர் கமல். அனுபவம், அறிவாற்றல் பெற்றவர் என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார். அவரிடம் எந்த தலைப்பு குறித்து உரையாடினாலும் பார்வையாளர்களை கவரும் வகையில் பேசுவார். அறிவாற்றலை வெளிப்படுத்துவதில் அவர் ஒரு பிகாசோ.

விஜய் சேதுபதி பழகுவதற்கு இனிமையானவர், பணிவானவர், நேர்மறை குணங்களைக் கொண்டவர். இருந்தாலும், போட்டியாளர்களை கையாள்வதில் கமல்ஹாசனை உடன் ஒப்பிட முடியாது. பார்வையாளர்களை கவர்வதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதை மற்றவர்களை போலவே நானும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். கமல்ஹாசன் இடத்தில் விஜய் சேதுபதியை பார்க்க ஆவலுடன் உள்ளேன், என்றும் தெரிவித்துள்ளார்.

More News

தனுஷின் 'இட்லி கடை' படத்தில் நான் நடிக்கவில்லை.. பிரபல நடிகர் அறிவிப்பு..!

தனுஷின் 'இட்லி கடை' திரைப்படத்தில், பிரபல நடிகர் ஒருவர் தனுஷின் சகோதரராக நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், நான் 'இட்லி கடை' படத்தில் நடிக்கவில்லை," என்று அந்த நடிகர் தனது சமூக வலைதளத்தில் விளக்கம்

சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி ரொமான்ஸ் பாடல்.. சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட ஜிவி பிரகாஷ்..!

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த "அமரன்" திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் குறித்த தகவலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார்

பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி! என்ன காரணம்?

நடிகர்  கார்த்தி, பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் துணை முதலமைச்சர் பவன் கல்யாணிடம் தன்னுடைய சமூக வலைதளங்கள் மூலம் மன்னிப்பு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'மனுஷன் அங்க நிக்கிறாய்யா' மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து பிரபல சமையற்கலைஞர் வெங்கடேஷ் பட் பேசியுள்ளார்.

பிரபல சமையற் கலைஞரும், மாதம்பட்டி ரங்கராஜ் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத் தலைவரும், குக் வித் கோமாளி சீசன் 5ன் ஜட்ஜ்யும், மெஹந்தி சர்கஸ், Penguin ஆகிய இரு படங்களில் நடித்துள்ள நடிகருமான...

ஒவ்வொரு ரசிகனுக்கும் இருக்கும் கனவு.. விஜய் டிவி புகழ் சந்தித்த உச்ச நட்சத்திரம்..!

ஒவ்வொரு ரசிகனுக்கும் இருக்கும் கனவு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்திப்பது. அந்த தருணம் எனக்கு கிடைத்தது என்று விஜய் டிவி புகழ், தனது இன்ஸ்டாகிராம்