பிக்பாஸ் ரச்சிதாவுக்கு காதல் வந்துவிட்டதா? இணையத்தில் வைரலாகும் லவ் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் ரச்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைமுகமாக காதல் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு லவ் வந்து விட்டதா போன்ற கமெண்ட்ஸ் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியலில் அறிமுகமான ரச்சிதா மகாலட்சுமி அதன் பிறகு சன் டிவியில் ’இளவரசி’ விஜய் டிவியில் ’சரவணன் மீனாட்சி’ கலர்ஸ் தமிழ் டிவியில் ’அம்மன்’ ஜீ தமிழ் டிவியில் ’புது புது அர்த்தங்கள்’ உட்பட பல சீரியல்களில் நடித்திருந்தார்.
மேலும் ரச்சிதா மகாலட்சுமி, பிக் பாஸ் சீசன் ஆறு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பதும் ஸ்டார்ட் மியூசிக் உட்பட பல ரியாலிட்டி சோலையிலும் கலந்து கொண்டார் என்பதும் தெரிந்தது.
மேலும் ரச்சிதா ஒரு சில படங்களில் அவர் நடித்துள்ள நிலையில் தற்போது அவர் மூன்று தமிழ் படத்திலும் ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார் என்பதும், இந்த படங்கள் அனைத்தும் இந்த ஆண்டே வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மகாலட்சுமிக்கு ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் சற்று முன் அவர் தனது கையால் லவ் என்ற சிம்பல் காட்டும் வீடியோவை பதிவு செய்துள்ளார். மேலும் இந்த வீடியோவில் லவ் புகைப்படம் உள்ளதை அடுத்து ரச்சிதா மகாலட்சுமிக்கு புதிய காதல் வந்துவிட்டதா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
ரச்சிதா மகாலட்சுமி கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தற்போது பிரிந்து வாழ்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments