அப்போதான் இவ பெரிசா வெடிக்க வைப்பா: வைஷ்ணவியை கலாய்த்த டேனி

  • IndiaGlitz, [Friday,July 06 2018]

பிக்பாஸ் வீட்டின் தலைவியாக வைஷ்ணவி கடந்த திங்கள் முதல் இருக்கின்றார். ஒரு தலைமைக்குரிய பண்பு சிறிதும் இல்லாத இவரை எப்படி தலைவராக ஏற்றுக்கொள்வது என்று ஏற்கனவே போட்டியாளர்களில் ஒருசிலர் முணுமுணுத்தனர். வைஷ்ணவியின் செயல்களும் அப்படித்தான் இருந்தது.

தலைவி என்ற பண்புக்குரிய வகையில் ஒரு முடிவை தீர்மானமாக எடுக்காமல், எந்த டீமுக்கும் பாதிப்பு வந்து விடக்கூடாது என்பது போல் இருபக்கமும் மாறி மாறி சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேசி வருகிறார்.

இந்த நிலையில் இன்று பாலாஜிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் மோதல் வெடிக்கின்றது. ஒரு குழந்தை மாதிரி நினைத்து அட்வைஸ் செய்வதாக பாலாஜி கூற, அதற்கு ஐஸ்வர்யா, 'நான் ஒன்றும் குழந்தை இல்லை ஒரு பிரச்சனை வந்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும் என்று பதிலடி கொடுக்கின்றார்.

இந்த நிலையில் ஒரு டீமாக இருக்கும் நீங்கள், உங்களுக்குள் ஒரு பிரச்சனை வந்தால் நீங்களே பேசி தீர்த்து கொள்ளுங்கள், உங்களால் முடியவில்லை என்றால் என்னிடம் வாருங்கள் என்று தலைவி வைஷ்ணவி கூற அதற்கு டேனி, 'அப்போதான் இவ பெரிசா வெடிக்க வைப்பா' என்று கமெண்ட் அடிக்க பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருமே சிரிக்கின்றனர். இந்த அவமானம் வைஷ்ணவிக்கு தேவையா? என்பதே பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

 

More News

பிரபுதேவாவுக்கு வில்லனாகும் 'பாகுபலி' பட நடிகர்

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' படத்தில் காளகேயா மொழியில் பேசி கொடூரமான வில்லனாக நடித்திருந்தவர் பிரபாகர் என்ற நடிகர். இந்த படத்தில் இவருடைய தோற்றமும் இவர் பேசும் வசனமும் பயங்கரமாக இருக்கும்

மக்கள் நீதி மய்யமா? மாமா நீதி மய்யமா?: இந்து முன்னணி கட்சி ஆவேசம்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பொதுமக்களின் ஆதரவை பெற்றுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்

​ கடைக்குட்டி சிங்கத்தில் ஜொலிக்கும் சூப்பர் சிங்கர்  தனுஸ்ரீ மற்றும் தேஜ் !

கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வரும் 13ஆம் தேதி வெளிவரவுள்ள திரைப்படம் 'கடைக்குட்டி சிங்கம். இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்? மணமகள் யார்?

அஜித் நடித்த 'கிரீடம், விஜய் நடித்த 'தலைவா' உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர்களில் ஒருவர் விஜய்.

கதறிகதறி அழும் டேனியல் ரித்விகா, நித்யா: காரணம் என்ன?

தினமும் இரண்டு மணி நேரம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட தினமும் வெளியாகும் 30 வினாடிகளே உள்ள புரமோ வீடியோக்கள் நன்றாக இருப்பதாக் பிக்பாஸ் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.