இதுதான் அக்ரிமெண்ட்.. ஓகே சொன்னா விளையாடலாம்.. அழைப்பு விடுத்த பிக்பாஸ் பிரதீப்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இதுதான் அக்ரிமென்ட், ஓகே சொன்னால் விளையாட நான் தயார்’ என பிக் பாஸ் பிரதீப் யூடியூப் சேனல்களுக்கு அழைப்பு விடுத்து பதிவு செய்துள்ள ட்விட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
பிக்பாஸ் வீட்டை விட்டு போட்டியாளர்கள் வெளியேறிய அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர்களுடைய பேட்டிகள் யூடியூப் சேனலில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு ஒரு சில மாதங்கள் ஆகியும் இன்னும் பிரதீப் எந்த யூடியூப் சேனலுக்கும் பேட்டி கொடுக்கவில்லை. இந்த நிலையில் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பது குறித்து பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார்.
அதில் ’இன்டர்வியூ கேட்டு வரும் சோசியல் மீடியா சேனல்களே, எப்படியும் நீங்க பிராண்ட் கிட்ட பணம் வாங்கி என்னை விக்கத்தான் போறீங்க. அதனால் வேலையில்லாம பேசற வீடியோவுக்கு ஒரு வியூஸ்வுக்கு ஒரு ரூபாய் கணக்கு வச்சு அக்ரிமெண்ட் போட்டு கொடுத்தீங்கன்னா, நானும் விளையாட தயார்’ என்று கூறியுள்ளார்.
இந்த பதிவுக்கு ஏராளமானோர் லைக் செய்து வருகின்றனர். மேலும் ’நீங்கள் எந்த யூடியூப் சேனலுக்கும் இன்டர்வியூ கொடுக்காமலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டீர்கள்’ என்று ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். .
Interview kettu varum social media channelgale, epdiyum neenga brands kitta laam amount vaangi, enna vikka dhan poreenga. So, vandhu vela ilama pesurathukaaga video oru view ku 1₹ kanakku vechu agreement pottu kudutheengana, I'm Game✌️ #SolvathellamUnmailaVaraVendiyavanDaNaanu pic.twitter.com/mpddQIXzT3
— Pradeep Antony (@TheDhaadiBoy) January 14, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout