ஜனவரி 12ல் வெளியாகும் பூர்ணிமா படம்.. அதற்குள் வெளியே வந்துவிடுவாரா?

  • IndiaGlitz, [Wednesday,December 27 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக பூர்ணிமா நடித்த திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குள் அவர் வெளியே வந்து விடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் போட்டியாளர் பூர்ணிமா ஏற்கனவே ’பிளான் பண்ணி பண்ணனும்’ ’சோட்டா’ போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான நயன்தாராவின் ’அன்னபூரணி’ திரைப்படத்தில் அவரது தோழியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் பூர்ணிமா நடித்த ’செவப்பி’ என்ற திரைப்படம் ஆகா ஓடிடி தளத்தில் ஜனவரி 12ஆம் தேதி நேரடியாக வெளியாக உள்ளது. எம்.எஸ் ராஜா இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் பூர்ணிமா முக்கிய கேரக்டரிலும் ரிஷிகாந்த், ராஜாமணி, அத்வேதன், செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரவீன் குமார் இசையில் மனோகரன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம் 1990களில் தமிழ்நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் ஐந்து வயது சிறுவனை சுற்றி நடக்கும் கதை ஆகும். அந்த சிறுவன் ஆசையோடு ஒரு கோழியை வளர்க்கும் நிலையில் ஒரு தந்தை தன் குழந்தைகள் மீது அதிக அன்பை காட்டுவது போல அந்த கோழியை பாதுகாப்பாக சிறுவன் வளர்த்து வருகிறான். ஒரு கட்டத்தில் அந்த கோழியை சிறுவன் பிரிய நேரிடும் போது அந்த கோழியால் கிராமமே இரண்டாகிறது. இறுதியில் அந்த சிறுவனும் கோழியும் ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் இந்த படத்தின் கதை.

More News

'தளபதி 68' படத்தில் இணைகிறாரா 'ஜெயிலர்' நடிகை? எகிற வைக்கும் எதிர்பார்ப்பு..!

 தளபதி விஜய் நடித்து வரும் 68 வது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? 6 நாட்களில் வசூலை குவிக்க வாய்ப்பு..!

தனுஷின் 'கேப்டன் மில்லர்' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும் சரியான ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

நான் வேணும்னா போய்விடட்டுமா சார்.. ஒரு கேம் கூட ஆட விடமாட்றாங்க சார்.. புலம்பும் போட்டியாளர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் ஆரம்பித்தாலும் ஆரம்பித்தது,  ஒவ்வொருத்தரும் குரூப் சேர்ந்து கொண்டு இன்னொரு குரூப்பில் உள்ளவர்களை எலிமினேட் செய்து வருகின்றனர்.

கிரிக்கெட் அணியின் உரிமையாளர் ஆனார் நடிகர் சூர்யா.. சூப்பர் அறிவிப்பு..!

 நடிகர் சூர்யா கிரிக்கெட் அணியின் உரிமையாளர் ஆனதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

நானெல்லாம் டைட்டில் வாங்கிட்டா தீக்குளிச்சிருவாங்க போல.. நள்ளிரவில் பேசிய போட்டியாளர்..!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவர் நானெல்லாம் டைட்டில் வாங்கிட்டா இவனுங்க செட் முன்னாடியே தீக்குளித்து விடுவாங்க போல என்று காமெடியாக பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.