ரூ.16 லட்சத்துடன் பூர்ணிமாவுக்கு கிடைத்த மொத்த தொகை இவ்வளவா? ரன்னருக்கு கூட இவ்வளவு இருக்காதே..!

  • IndiaGlitz, [Saturday,January 06 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்ட பூர்ணிமா 16 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறிய நிலையில் அவரது சம்பளத்துடன் இந்த 16 லட்சத்தையும் சேர்த்தால் கிட்டத்தட்ட அவருக்கு 30 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பூர்ணிமாவுக்கு பிக்பாஸ் வீட்டில் விளையாடுவதற்கு ஒரு நாள் சம்பளம் ரூ.15,000 என்று பேசப்பட்டு இருப்பதாகவும் அதனை அடுத்து அவர் 94 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததால் மொத்தம் 14 லட்சம் சம்பளம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

பணப்பெட்டியில் இருந்த 16 லட்சத்துடன் அவரது சம்பளத்தையும் சேர்த்தால் அவருக்கு மொத்தம் 30 லட்ச ரூபாய் சம்பளம் கிடைக்கும். பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு 50 லட்சம் மற்றும் சம்பளம் கிடைக்கும் நிலையில் டைட்டில் வின்னருக்கு அடுத்தபடியாக பூர்ணிமாவுக்கு தான் அதிக பணம் இந்த சீசனில் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இடமாக வரும் ரன்னருக்கு கூட இவ்வளவு பெரிய தொகை கிடைக்காது என்றும், டைட்டில் வின்னரை அடுத்து இரண்டாவது அதிக பணத்தை பெற்று இருப்பது பூர்ணிமா தான் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பூர்ணிமாவுக்கு ஒரு சில பட வாய்ப்புகளும் கிடைக்க இருப்பதாகவும் சில பட நிறுவனங்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.