திருமணம் குறித்த தகவலை வெளியிட்ட பிக்பாஸ் பாவனி!
- IndiaGlitz, [Saturday,January 22 2022]
பிக்பாஸ் பாவனி தனது திருமணம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் மூன்றாவது இடம் பெற்றவர் பாவனி என்பதும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது கடந்து வந்த பாதை என்ற டாஸ்கின்போது தான் காதலித்து ஆசை ஆசையாக திருமணம் செய்து கொண்ட கணவர் திடீரென தற்கொலை செய்தது தன்னை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றும் அதன்பிறகு ஏற்பட்ட காதலும் தோல்வியில் முடிந்தது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபினய் உடன் ஏற்பட்ட உறவு சர்ச்சைக்குள்ளானது என்பதும் அதே போல் அமீர் காதலிப்பதாக கூறிய போதிலும் அந்த காதலை ஏற்று கொள்ளாமல் அவரை பாவனி தவிர்த்து வந்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ரசிகர்களுடன் சமீபத்தில் உரையாடிய பாவனி, தனது திருமணம் குறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்தபோது, ‘வாழ்க்கையில் இனி திருமணம் என்பதே இல்லை என்றும் தன்னுடைய முழு கவனமும் இனி நடிப்பில் தான் இருக்கப் போகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே பிக்பாஸ் பாவனி இனி திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவில் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.