என்ன ஆச்சு பிக்பாஸ் பாவனி ரெட்டிக்கு..? மருத்துவமனையில் இருக்கும் அதிர்ச்சி புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் பாவனி. இந்த நிகழ்ச்சியில் பாவனி ரெட்டி கடைசி வரை தாக்குபிடித்து 105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தார் என்பதும் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக்பாஸ் பாவனி ரெட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
என் வாழ்க்கையின் கடந்த 15 நாட்களை கழிப்பது மிகவும் கடினமாக இருந்தது. கழுத்தில் சிறிய வலி தொடங்கிய நிலையில் அந்த வலி நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பித்தது. நான் எலும்பியல் நிபுணரிடம் ஆலோசித்தேன், என் பிசியோதெரபி தொடர்ந்தேன். ஆனால் வலி தாங்க முடியாமல் போனது.
நான் பல தூக்கமில்லாத இரவுகள் கழித்தேன், வலியால் அழ ஆரம்பித்தேன், இடையில் எனக்கு படப்பிடிப்புகள் கூட இருந்தது. ஓய்வு எடுக்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால் இந்த வலியுடன் படப்பிடிப்புக்கு சென்றேன்.
படப்பிடிப்பில் உடன் இருந்தவர்கள் மிகவும் ஆதரவாக இருந்ததால் நான் வீட்டில் இருப்பதை போல் உணர்ந்தேன். ஒருவழியாக படப்பிடிப்பை முடித்தேன். அதன்பிறகு நான் தினமும் என் பிசியோதெரபியைத் தொடர்ந்தேன், ஆனால் வலி இன்னும் மோசமாகிவிட்டது, என்னால் என் வலது கையை உயர்த்த முடியவில்லை, அது உடைந்தது போல் உணர்ந்தேன்.
அதிகாலையில் எழுந்து தயாராவது எனக்கு ஒரு பெரிய பணியாக இருந்தது. வலியால் நான் சத்தமாக கத்தினேன். உதவியற்ற உணர்வு சுவரில் அடித்தது. இறுதியாக டாக்டரை சந்தித்து அவரது அறிவுரையின்படி அறுவை சிகிச்சையை முடித்தேன், இப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன். வலி இல்லை. டாக்டருக்கு ஒரு பெரிய நன்றி.
இந்தச் சம்பவத்தில் நான் மட்டுமல்ல, எனது குடும்பத்தினரும், எனது நண்பர்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர். என்னால் அமீரின் தூக்கத்தையும் வேலையையும் நான் கெடுத்துவிட்டேன் என்று எனக்குத் தெரியும். எனக்கு வலி இருக்கும்போது எனக்கு ஆறுதல் கூறிய அமீருக்கு நன்றி’ என்று பாவனி ரெட்டி தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com