'சுதந்திரம்' குறித்து ஓவியாவின் பரபரப்பான டுவீட்!

  • IndiaGlitz, [Saturday,August 15 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் குடிபுகுந்த நடிகை ஓவியா, அந்த நிகழ்ச்சிக்குப் பின் தனது சமூக வலைதளங்களில் எப்பொழுதாவது ஒருசில கருத்துக்களை பதிவு செய்து வந்தார். ஆனால் கடந்த சில தினங்களாக அவர் அடிக்கடி டுவிட்டரில் டுவீட்டுக்களை பதிவு செய்து வருகிறார்.

ஒருசில விஷயங்களை நேரடியாகவும் ஒருசில விஷயங்களை மறைமுகமாகவும் அவர் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு பெரும் ஆதரவும் கிடைத்து வருகிறது. குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமா? என்பது குறித்தும் போட்டியாளர்களின் மன அழுத்தத்தை பிக்பாஸ் நிர்வாகிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்தும் ஓவியா பதிவு செய்த டுவீட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ’சுதந்திரம்’ குறித்து அவர் தனது டுவிட்டரில் ’சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவது அல்ல, எடுக்கப்படுவது என்று சுபாஷ் சந்திரபோஸ் கூறியதை ஓவியா தனது டுவிட்டரில் சுதந்திரம் குறித்த கருத்தை தெரிவித்துள்ளார். ஓவியாவின் சுதந்திரம் குறித்த இந்த கருத்துக்கு ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

 

More News

அரசியல் கட்சியை பதிவு செய்ய விஜய் தரப்பு தீவிர ஆலோசனை? சட்டப்பேரவை தேர்தலில் போட்டியா?

உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார்

கடவுள் நேராக வருவதில்லை, அஜித் போன்றவர்களின் உருவில் வருவார்: 67 வயது தீவிர ரசிகரின் வைரலாகும் வீடியோ 

சென்னை நந்தனம் பகுதியை சேர்ந்த ஜான் மைக்கேல் என்ற 67 வயது நபர் தான் தீவிர அஜித் ரசிகர் என்று கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 

தண்ணீரில் தத்தளித்த இளைஞர்களை காப்பாற்றிய 3 பெண்களுக்கு மிகப்பெரிய விருது: தமிழக அரசு அறிவிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தண்ணீரில் தத்தளித்த வாலிபர்களை தாங்கள் அணிந்திருந்த சேலையில் முடிச்சுப்போட்டு காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை

எஸ்பிபி சிகிச்சைக்கு அரசு உதவ தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் 

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவரது உடல் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது என்பது தெரிந்தது 

ஒருவிரலை தூக்கி காண்பிக்கும் எஸ்பிபியின் புகைப்படம்: பிரபல நடிகர் டுவீட்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்