திருமண வாழ்க்கையில் எனக்கு உடன்பாடு இல்லை: ஓவியா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் என்றாலே அனைவருக்கும் உடனே ஞாபகம் வரும் பெயர் ஓவியா. இந்த நிகழ்ச்சியால் ஓவியா அளவுக்கு இன்னும் யாரும் புகழ் பெறவில்லை. இந்த நிலையில் ஓவியா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது விருப்பு, வெறுப்பு குறித்து மனம் திறந்து சில விஷயங்களை தெரிவித்துள்ளார். அவற்றில் ஒன்று அவரது திருமணம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாக வெற்றியாளரான ஆரவ்வை ஓவியா காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓவியா தனது திருமணம் குறித்து கருத்து தெரிவிக்கையில், 'திருமண வாழ்க்கையில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், அதனால் திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என்றும் சுதந்திரமாக இருக்க விரும்புவதாகவும், இந்த வாழ்க்கையே தனக்கு சவுகரியமாக இருப்பதாகவும், கடைசி வரை சினிமாதான் என் கனவு' என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு ‘சூப்பர் உமன்’ கேரக்டரில் நடிக்க ஆசை என்றும் அப்படி ஒரு வேடம் கிடைத்தால், மகிழ்ச்சியுடன் ஏற்று நடிப்பதாக கூறிய ஓவியா, தனக்கு நண்பர்களும் கிடையாது. எதிரிகளும் கிடையாது, எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகுவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் விமலுடன் ஓவியா நடித்த 'களவாணி 2' திரைப்படம் சில காரணங்களால் காலைக்காட்சி தடைபட்டாலும் மாலை முதல் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com