ஜனவரி இறுதியில் மீண்டும் பிக்பாஸ் தமிழ்: அதிரடி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,December 28 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் விஜய் டிவியில் கடந்த மூன்று மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசன் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜனவரி இறுதியில் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட உள்ளதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓடிடி வடிவம் விரைவில் தொடங்க உள்ளதாக ஏற்கனவே வெளியான செய்தியை பார்த்தோம். ஹிந்தியில் இது போன்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் தமிழிலும் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த நிகழ்ச்சியில் சீசன் 1 முதல் சீசன் 5 வரை கலந்து கொண்ட போட்டியாளர்களில் 12 அல்லது 13 பேர் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் ஓடிடியில் மட்டுமே ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த வீடியோ ஒன்று விஜய் டிவி அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசனே தொகுத்து வழங்குவாரா? அல்லது வேறு ஏதேனும் தொகுத்து வழங்குவார்களா? இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் யார் யார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

விஜய்சேதுபதி பட இயக்குனர் வீட்டில் திருட்டு: உடனடியாக கவனித்ததால் விபரீதம் தவிர்ப்பு!

விஜய்சேதுபதி படத்தை இயக்கிய இயக்குனர் ஒருவரின் வீட்டில் திருட்டு நடந்துள்ளது என்றும் சரியான நேரத்தில் இந்த திருட்டை கண்டுபிடித்ததால் மிகப் பெரிய விபரீதம் தவிர்க்கப்பட்டதாகவும்

பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது இந்தியக் கிரிக்கெட்

எனக்கும் தங்கம் கிடைத்துவிட்டது: நடிகை அமலாபால் குஷி!

எனக்கும் தங்கம் கிடைத்துவிட்டது என நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

ஜிவி பிரகாஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடித்த 'பேச்சிலர்' மற்றும் 'ஜெயில்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சமீபத்தில் வெளியான படத்தின் குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

சமீபத்தில் வெளியான திரைப்படத்தின் குழுவினர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.