இப்படி ஒரு மேலாடையா? உலகத்தில் இதுதான் முதல்முறை? பிக்பாஸ் நடிகையின் வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Tuesday,October 18 2022]

உலகத்தில் இதுவரை யாருமே அணியாத வகையில் வித்தியாசமான மேலாடை அணிந்துள்ள பிக்பாஸ் நடிகையின் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை உர்ஃபி ஜாவித் என்பதும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மேலாடை மட்டும் அணிந்து கவுன் அணிவதற்கு பதிலாக வாட்சுகளை மட்டுமே ஆடையாக அணிந்து வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான மேலாடை ஒன்றை அணிந்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த மேலாடையில் முன் பக்கம் மட்டுமே மறைக்கும் வகையில் உள்ளது என்பதும் பின்பக்கம் ஓபன் ஆக உள்ளது என்பதுதான் சிறப்பு. மேலும் இந்த வீடியோவின் கேப்ஷனாக ’நீங்கள் மேலாடை எதுவும் அணிய விரும்பவில்லை என்றால் இந்த ஆடையை அணியலாம்’ என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

இப்படி ஒரு மேலாடையை உலகத்தில் இதுவரை யாரும் அணிந்ததில்லை என்றும் இது தான் முதல் முறை என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். இந்த மேலாடையை நாங்களும் முயற்சி செய்யப் போகிறோம் என்றும் சிலர் கமெண்ட் எழுதியுள்ளனர்.