மேலாடைக்கு பதிலாக மாற்று ஐடியா: பிக்பாஸ் நடிகையின் வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Sunday,March 13 2022]

பிக்பாஸ் ஓடிடி நடிகை ஒருவர் மேலாடைக்கு பதிலாக மாற்று ஐடியா கண்டுபிடித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஹிந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும், தொலைக்காட்சி நடிகையுமான உர்ஃபி ஜாவித் என்பவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடைக்கு பதிலாக இரும்பு சங்கிலியை மாலையாக அணிந்துள்ளார். அதில் சில கலர்கலரான பூட்டுக்களும் உள்ளன. இந்த ஆடையுடன் அவர் போஸ் கொடுத்து நடந்த வீடியோவை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் சங்கிலியை கழுத்தில் நீண்ட நேரம் அணிந்தால் தனது கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் குறிப்பிட்டுள்ளார்.