இந்த வார நாமினேஷனில் எத்தனை பேர்? யார் யாரையெல்லாம் நாமினேஷன் செய்தார்கள்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் 10 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வாரம் ஏழு போட்டியாளர்கள் நாமினேசன் செய்யப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் அதில் ஒவ்வொரு போட்டியாளரும் 2 போட்டியாளர்களை நாமினேசன் செய்வார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று வித்தியாசமாக ஒவ்வொரு போட்டியாளரும் 3 போட்டியாளர்களை நாமினேசன் செய்தனர்.
இறுதியில் 7 போட்டியாளர்கள் இந்த வார நாமினேஷனில் உள்ளதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார். அவர்கள் பின்வருமாறு: அமீர், இமான் அண்ணாச்சி, அக்ஷரா, அபினய், தாமரைச்செல்வி, நிரூப் மற்றும் சிபி
இந்த நிலையில் நேற்று ஒவ்வொரு போட்டியாளரும் நாமினேஷன் செய்த 3 போட்டியாளர்கள் குறித்த விபரம் இதோ.
பாவனி: ராஜூ, தாமரை மற்றும் அக்சரா
தாமரை: ப்ரியங்கா, அபினய் மற்றும் இமான்
இமான்: அபினய், அமீர் மற்றும் சிபி
சிபி: நிரூப், வருண் மற்றும் இமான்
அக்சரா; ப்ரியங்கா, அமீர் மற்றும் சிபி
சஞ்சீவ்: நிரூப், அபினய் மற்றும் இமான்
வருண்: அமிர், நிரூப் மற்றும் அபினய்
அமீர்: இமான், அக்சரா மற்றும் தாமரை
ராஜூ: அபினய், நிரூப் மற்றும் அக்சரா
அபினய்: ராஜூ, அமீர் மற்றும் அக்சரா
ப்ரியங்கா: அக்சரா, தாமரை, நிரூப்
மேலும் இந்த வார நாமினேஷனில் கடந்த வாரம் சர்ச்சைக்குரிய வகையில் சண்டை போட்ட பிரியங்கா இல்லாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments